சீ. சதீஷ்குமார்.  [email protected]

நான் Army- Exam  எழுதினேன். வேலை கிடைக்க வில்லை. அடுத்த இராணுவத் தேர்வில் வேலை கிடைத்துவிடுமா? திருமணம் எப்போது நடைபெறும்?

Advertisment

23-3-2001-ல் பிறந்தவர். மீன லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவருடைய ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி லக்னத்தில் உச்சம். கூடவே 6-ஆம் அதிபதி சூரியனும். எனவே இவருக்கு, கண்டிப்பாக, தைரிய வீரம் சார்ந்த சீருடை பணி கிடைக்கும். நடப்பு சனி தசையில் சனி புக்தி. 2026 ஜனவரி முடிய உள்ளது. அடுத்து புதன் புக்தி ஆரம்பம். அப்போது எழுதும் பரீட்சையில் பாஸாகிவிடுவீர்கள். வேலை வெகுதூரத்தில் கிடைக்கும். இவருடைய ஜாதகத்தில் 5+7-ஆம் அதிபதிகள் சேர்க்கை மற்றும் சனி- செவ்வாய் பார்வை. எனவே விருப்பத் திருமணம் 2028 பிப்ரவரிக்குள் நடக்கும். குலதெய்வத்தையும், சனீஸ்வரரையும் வணங்கும்.இவ்விதம் 3-ஆம் அதிபதி உச்சமாகி, கூடவே சூரியன் 6-ஆம் அதிபதியாகி ஒன்றிணைந்து இருக்கும்போது, அந்த ஜாதகர்கள் கண்டிப்பாக இராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை எனும் சீருடைய பணிகளை பெறுவார்கள்.

Advertisment

குமார், ஈரோடு.

இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. பரிகாரம் கூறுங்கள்.

3-6-2015-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். நடப்பு கேது தசை. இது 8-ஆமிடத்தில் இருந்து நடக்கிறது. எனவே பையனுக்கு உடல்நலம் கெடுகிறது. நடப்பு கேது தசையில் சனி புக்தி. இது 2027 பிப்ரவரி இருக்கும். எனவே அது வரையில் பையனுக்கு அடிக்கடி சளி பிடிப்பது, எங்காவது விழுந்து கொள்வது என்று இருப்பான். முடிந்தபோதெல்லாம், விநாயகருக்கு அபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். இந்த பையனுக்கு 8-ல் கேது இருந்து "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்று இருப்பினும், அவரின் சாரநாதர் சனி ஆவார். அவர் நீச சந்திரனுடன் உள்ளார். எனவே 8, 6-ஆம் அதிபதிகளின் தசாபுக்தி நடக்கும்போது, ஜாதகர்கள் சற்று சிரமபடத்தான் செய்வார்கள். இதற்கு முனீஸ்வரர் போன்ற தெய்வத்தை வணங்குவது தகும். 

சரவணன், ஈரோடு.

இவருடைய திருமணம், வேலை மாற்றம் மற்றும் இவர் வீட்டில் ரொம்ப சண்டை போடுவதாகவும் கேட்டுள்ள னர். 

Advertisment

24-3-1998-ல் பிறந்தவர். மீன லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். இவருடைய லக்னத்தில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து கிரக யுத்தம் பெறுகிறது. மேலும் இதில் மூன்று கிரகங்கள், நீச கிரக சாரத்தில் நிற்கிறது. எனவே எப்போதும் இவர் ஒரு குழப்ப நிலையில் இருப்பார்.  பிறரிடம் பழக்கம் வைத்துக் கொள்வதையும் விரும்பமாட் டார். வேலையும் ஒழுங்காக அமையாது. நடப்பு ராகு தசையில் சூரிய புக்தி. இது இவருக்கு வெளியிடத்தில் வேலை தரும். அதுதான் இவருக்கு நல்லது. கூடியமட்டும் இவரை, வீட்டில் வைத்துக்கொள் ளாமல், வெளியூரில் இருக்கும் மாதிரி பார்த்துக் கொள்ளவும். விருப்பத் திருமணங்கள் நடக்கும். காளியை   வணங்கவும். இவ்விதம் நிறைய கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருந்து, அதில் ஒன்று நீசமாகவும் இருந்தால், இவர்கள் ஏறக்குறைய சன்யாசி போல இருப்பர். இதனால் கூடியமட்டும் இவர்களை வெளியூரில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லது.

கோவிந்தன், திருச்சி.

எனது தசாபுக்தி மற்றும் உடல்நிலை, ஆயுள் பற்றி கூறவும். 

29-11-1955-ல் பிறந்தவர். கடக லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். லக்னாதிபதி உச்சமும், அதற்கு சனி பார்வையும் இருப்ப தால், ஆயுள் தீர்க்க ஜாதகமாக உள்ளது. நடப்பு புதன் தசையில் கேது புக்தி ஓடுகிறது. இதில் சற்று கால் பாதவ- உண்டாகும். சற்று மறதியும், மன உளைச்சலும் உண்டாகும். அவ்வப்போது, விநாயகரை, அருகம்புல் கொண்டு வணங்குங்கள். இதுமாதிரி புதன் தசை, கேது புக்தி நடக்கும் போது, அவர்கள் சின்ன வயதுடையவர்களாக இருந்தால், காதல் ஏற்படும் என்று கூறிவிட லாம். ஆனால் வயதானவர்களுக்கு, நரம்பு சம்பந்தமான வியாதியும், மறதியும் ஏற்படும் என கணிப்பது சரியாக இருக்கும்.
ப்